[X] Close

ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி


  • kamadenu
  • Posted: 21 May, 2019 11:31 am
  • அ+ அ-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலிக''ள் என்று தெரிவித்துளார்.

 

முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர பூமியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

பிரணாப், மன்மோகன்சிங் பங்கேற்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகிய இருவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவரது நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

 

ராஜீவ் காந்தி படுகொலை

கடந்த 1991-ம் ஆண்டு சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட் டிருந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண் தற்கொலைப்படை தீவிரவாதியால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். கடந்த 1984 அக்டோபர் 31-ம் தேதி முதல் 1989-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி வரை ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close