[X] Close

மன்னிப்பு கோரினார் விவேக் ஓபராய் : ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை ட்வீட்டுக்கு கடும் கண்டனம்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 09:45 am
  • அ+ அ-

-பி.டி.ஐ.

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து தனப்பட்ட முறையில் தேர்தல் முடிவுகளை தொடர்புபடுத்தி செய்த ட்வீட்டுக்கு கடும் கண்டனம் எழுந்ததையடுத்து, நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கோரினார்.

மக்களவைத் தேர்தல் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்த கணிப்புகளுடன் ஒப்பிட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த மீம்ஸை சமூக வலைதளத்தில் நடிகர் விவேக் ஓபராய் வெளியிட்டார். இந்த படம் நடிகை ஐஸ்வர்யா ராயின் தனிமனிதஒழுக்கத்தை சீண்டிப்பார்க்கும் விதத்தில் இருந்தது.

அதாவது, நடிகர் சல்மான் கான்-ஐஸ்வர்யா ராய் இணைந்து எடுத்த படம், தம்முடன் ஐஸ்வர்யா ராய் எடுத்த புகைப்படம், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் எடுத்த படம் ஆகியவற்றை இணைத்து விவேக் ஓபராய், ட்விட்ரில் பதிவிட்டிருந்தார்.

இதில் முதல் படத்துக்கு கருத்து கணிப்பு, 2-வது படத்துக்கு  வாக்கு கணிப்பு, மூன்றாவது படத்துக்கு தேர்தல் முடிவு என அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐஸ்வர்யா ராயின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக சித்தரிக்கும் வகையில் இந்த படம் இருந்ததாக ட்விட்டரில் பேசப்பட்டு, கண்டனம் எழுந்தது. விவேக் ஓபராயின் ட்வீட்டுக்கு தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியது.

மகளிர் ஆணையம் செய்த ட்விட்டில் , " விவேக் ஓபராயின் பதிவு மிகவும் குற்றமானது, நெறிமுறைகளை மீறியது, பெண்களின் மாண்பு மீதும், பெண்கள் மீதும் அவர் எந்த அளவுக்கு அவமரியாதை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தான் வெளியிட்ட ஐஸ்வர்யா ராய் குறித்த படத்தை விவேக் ஓபராய் தனது ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டு, தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

" சில நேரங்களில் முதல் பார்க்கும்போது, ஒருவிஷயம் விளையாட்டுத்தனமாகவும், யாரையும் பாதிக்காமல் இருக்கும்போது, அதுபலருக்கு அவ்வாறு இருப்பதில்லை.  நான் கடந்த 10 ஆண்டுகளாக சமூகத்தில் மிகவும் விழிம்புநிலையில் இருக்கும் 2 ஆயிரம் ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல வாழ்வை பெற்றுக்கொடுத்திருக்கிறேன்.

 நான் ஒருபோதும் பெண்களுக்கு எதிராக அவமரியாதை செய்தேன் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நான் வெளியிட்ட ஒரு மீம்ஸ்க்கு ஒரு பெண்ணை பாதித்து எரிச்சலடைய வைத்திருந்தால்கூட அதற்கு பரிகாரம் தேடுகிறேன். மண்ணிப்பு கோருகிறேன். என்னுடைய ட்வீட் நீக்கப்பட்டது " எனத் தெரிவித்துள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close