[X] Close

நாதுராம் கோட்ஸேயின் பிறந்த நாளைக் கொண்டாடிய 8 பேர் கைது


8

  • kamadenu
  • Posted: 20 May, 2019 21:21 pm
  • அ+ அ-

மகாத்மா காந்தி கொலையாளி நாதுராம் கோட்சேயின் பிறந்த தினத்தைக் கொண்டாடிய இந்து மகாசபையைச் சேர்ந்த 8 பேரை குஜராத் போலீஸார் சூரத்தில் கைது செய்தனர்.

 

“8 பேரை போலீசார் கைது செய்தனர், இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. காந்தியின் குஜராத்தில் கோட்சேயைக் கொண்டாடுவதை மாநில அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது” என்று குஜராத் மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

மகாத்மா கொலையாளியைக் கொண்டாடுவதன் மூலம் மாநிலத்தின் சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

 

சூரியமுகி அனுமார் கோயிலில் இந்து மகாசபாவினர் இந்த கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கமிஷனர் சதீஷ் சர்மா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close