[X] Close

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 20 May, 2019 16:14 pm
  • அ+ அ-

-பிடிஐ

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக ஆளும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபக் பபாரியா கூறும்போது, "பாஜக காங்கிரஸ் ஆட்சியை ஊழல் நடவடிக்கைகள் மூலம் கவிழ்க்க நினைக்கிறது. மத்திய பிரதேச மக்கள் காங்கிரஸுக்கு அளித்த வாக்குகளின் மதிப்பை சீர்குலைக்க பாஜக முயல்கிறது.

மக்கள் ஒருபோதும் இதனை மன்னிக்க மாட்டார்கள். பாஜகவின் ஆட்சி கொள்கை பிடிக்காமல்தான் மக்கள் அந்த ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு காங்கிரஸ் அமர வைத்தனர்" எனக் கூறியுள்ளார்.

நூலிழையில் வெற்றி

230 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 109 இடங்களைப் பிடித்தது. பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும், சமாஜ்வாதி ஒரு தொகுதியிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

வெறும் 5 இடங்கள் மட்டுமே வித்தியாசம் என்ற அளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனாலும் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மத்தியப் பிரதேசத்தைக் கைப்பற்றியது என்ற பெருமையை தக்க வைத்தது.

இந்நிலையில், மத்திய பிரதேச அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்துகிறது.

சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்:

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா கூறும்போது, "ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி அவையில் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்கச் செய்யுமாறு உத்தரவிட பாஜக கோரும்" என்றார்.

இது தொடர்பாக ஆளுநருக்கு விரைவில் கடிதம் எழுதவுள்ளதாகவும் பார்கவா கூறியுள்ளார். சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் விவசாயிகள் கடன் ரத்து விவகாரம் குறித்து ஆலோசிக்க விரும்புவதாகவும் கூறினார். 21 லட்சம் விவசாயிகள் கடனை ரத்து செய்ததாக காங்கிரஸ் கூறுவதை ஆராய வேண்டும் என்றும் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close