[X] Close

தேர்தல் கருத்துக் கணிப்புகள்: சல்மான், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் புகைப்பட மீமை வெளியிட்டு விவேக் ஓபராய் கிண்டல்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 16:04 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், ஊடகங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புகளைக் கிண்டல் செய்யும் விதமாக ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், விவேக் ஓபராய், அபிஷேக் பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற்று முடிந்துள்ளது. இறுதியாக 7-ம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே கருத்துக் கணிப்பு வெளியானது. அதேபோல தேர்தல் முடிந்த பிறகும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

 

இந்நிலையில் கருத்துக் கணிப்புகளைக் கிண்டல் செய்யும் விதமாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மீம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ஐஸ்வர்யா ராய், சல்மான் கானுடன் இருக்கும் புகைப்படத்தை தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யா ராய், விவேக் ஓபராயுடன் இருக்கும் புகைப்படத்தை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்றும், அபிஷேக் பச்சனுடன் இருக்கும் படத்தை இறுதி முடிவு என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த விவேக், ''ஹாஹா, கிரியேட்டிவ், இதில் அரசியல் இல்லை.. இதுதான் வாழ்க்கை!'' என்று தெரிவித்துள்ளார்.

 

பாலிவுட்டில் அடுத்தடுத்து சல்மான் மற்றும் விவேக் உடனான நட்பில் முறிவு ஏற்பட்டு, இறுதியில் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய், திருமணம் செய்தார். இந்நிலையில், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிட்டு விவேக் கிண்டலடித்ததை நெட்டிசன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close