[X] Close

‘‘காங்கிரஸ் அழிய வேண்டும்?’’- யோகேந்திர யாதவ் கருத்துக்கு குஷ்பு சரமாரி சாடல்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 15:41 pm
  • அ+ அ-

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தொடர்ந்து காங்கிரஸ் அழிய வேண்டும் எனக் கூறி ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 -ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறுகிறது. தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இதனால் கடும் அதிருப்திக்கு ஆளான ஸ்வராஜ் இந்தியா கட்சித்தலைவர் யோகந்திர யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘காங்கிரஸ் அழிய வேண்டும். இந்த தேர்தலில் பாஜகவை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்தியாவை காக்க வேண்டும் என்ற இலக்கை காங்கிரஸால் செய்ய முடியாது. இந்திய வரலாற்றில் காங்கிரஸ் நல்லது எதையுமே செய்யவில்லை. மாற்று சக்தியை உருவாக்குவதற்கு பெரிய தடைக்கல்லாக இருப்பது காங்கிரஸ் தான்’’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ‘‘நான் காங்கிரஸ்... நான் இந்தியா... உங்களை போன்ற சிலர் விரும்பினாலும் நான் அழியப்போவதில்லை. யோகேந்திர யாதவ் உங்கள் கருத்து வேதனை படுத்துகிறது. தீமையை எப்போதுமே காங்கிரஸ் தான் தடுத்து  நிறுத்த வேண்டுமா?ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். புண் ஆறுவதை விட அழுகுவது வேகமாக நடைபெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ எனக் கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close