[X] Close

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அரசியல் ஐசியு-வில் உள்ளன: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிண்டல்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 13:46 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அரசியல் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிண்டல் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவித்துள்ளன.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்தானது. 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி காணும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "கருத்து கணிப்பு முடிவைப் பார்த்துவிட்டு மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் அரசியல் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மே 23-க்குப் பின்னர் இவர்கள் எல்லோரும் வளமான எதிர்காலத்துக்கு என்ன செய்யலாம் என்று சுய பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே கருத்து கணிப்பே இறுதி முடிவாகிவிடாது மே 23 மக்கள் தீர்ப்பு முழுமையாகத் தெரியவரும் எனக் கூறுகின்றனர்.

இதற்கிடையில், டெல்லியில் பாஜக கூட்டணி தலைவர்களுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நாளை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close