[X] Close

நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல்; மறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 13:38 pm
  • அ+ அ-

நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்தும் வன்முறை நடந்த பகுதிகளில் மறு வாக்குப்பதிவு கோரியும் பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடை பெற்று முடிந்துள்ளது. இறுதியாக 7-ம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெற உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில், மாநிலம் முழுவதும் பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. பாஜக வேட்பாளர் பபுல் சுப்ரியோ தாக்கப்பட்டார். அவருடன் சென்ற வாகனங்களும் தாக்கப்பட் டன. இதுபோல ராகுல் சின்ஹா, நிலஞ்சன் ராய், அனுபம் ஹஸ்ரா உள்ளிட்ட பாஜக வேட்பாளர்களின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்நிலையில் மேற்கு வங்கம் உள்ளிட்ட வன்முறை நடைபெற்ற தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய மத்திய அமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பியூஷ் கோயல், ''தேர்தல் ஆணையரைச் சந்தித்துவிட்டு வந்துள்ளோம். பாஜக தொண்டர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்த முழுமையான தகவலைத் தந்துள்ளோம்.

7-வது கட்டத் தேர்தலிலும் முந்தைய கட்டத் தேர்தல்களிலும் வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு கோரியுள்ளோம். குறிப்பாக மேற்கு வங்கத்தில் மீண்டும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்'' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close