[X] Close

பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா விருந்து; ஆட்சி அமைப்பது குறித்த விவாதமா?


  • kamadenu
  • Posted: 20 May, 2019 12:56 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா நாளை டெல்லியில் விருந்து அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெற்று முடிந்துள்ளது. இறுதியாக 7-ம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெற உள்ளது.

இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் குழு நாளை கூட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர் அமித் ஷா, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்க உள்ளார். இதில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு, ஆட்சியமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விருந்தில் பாஜக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் குழுவும் நாளை கூடுவதால் பாஜகவின் அடுத்தகட்ட நகர்வு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close