[X] Close

மகாராஷ்டிராவில் பேருந்துகள் மோதியதால் விபத்து; இருவர் பலி; 20 பேர் படுகாயம்


20

  • kamadenu
  • Posted: 20 May, 2019 12:13 pm
  • அ+ அ-

-ஏ.என்.ஐ

மகாராஷ்டிராவில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இருவர் பலியாகினர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

மகாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. அங்குள்ள காலாபூர் வழியாக மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் சென்றுகொண்டிருந்தன. இன்று காலை எதிர்பாராத விதமாக அவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.இதில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதமடைந்தன.

இந்த விபத்தால் பேருந்தில் இருந்த இரு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close