[X] Close

'அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக, துணிவுடன் இருங்கள்': மம்தா பானர்ஜி  கருத்து


  • kamadenu
  • Posted: 19 May, 2019 20:24 pm
  • அ+ அ-

கருத்துக்கணிப்பு  வதந்திகள் மீது எனக்கு நம்பிக்கையில்லை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக, மனதைரியத்துடன் இருங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கும் நடந்தது. தேர்தல் முடிந்தநிலையில், பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. அதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 272 இடங்களுக்கு அதிகமாகவும், காங்கிரஸ் கட்சிக்கு சராசரியாக 126 முதல் 140 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், " நான் கருத்துக்கணிப்பு புரளியை நம்புவதில்லை. இந்த புரளிகள் மூலம் வாக்கு எந்தி்ரங்களை மாற்றுவது அல்லது வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்வது என்பதுதான் திட்டம். நான் கேட்டுக்கொள்வதெல்லாம் அனைத்து எதிர்க்கட்சிகளும் மனதைரியத்துடன், வலிமையுடன் ஒற்றுமையாக இருங்கள். இந்தபோரில் நாம் ஒன்றாக இணைந்து போரிடுவோம் " எனத் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close