[X] Close

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: முதன்முறையாக தனித்தனியாக வாக்களித்தனர்


  • kamadenu
  • Posted: 19 May, 2019 16:52 pm
  • அ+ அ-

பிஹாரில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதன்முறையாக தனித்தனியாக வாக்களித்தனர்.

பாட்னாவை சேர்ந்தவர்கள் சபா மற்றும் பரா. ஒட்டிப் பிறந்த இவர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதற்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் உள்பட பலர் செய்த பெருமுயற்சிகள் பலனளிக்கவில்லை. இவர்களின் துயரநிலையை அறிந்த உச்சநீதிமன்றம் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அளிக்குமாறு முன்னர் பீகார் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

பிறவியிலேயே தலைப்பகுதியில் ஒட்டிப்பிறந்த இவர்களுக்கு  இருவரையும் ஒருவராகவே கருதி தேர்தல் ஆணையம் ஒரே ஒரு வாக்காளர் அடையாள அட்டை வழங்கி இருந்தது.

toul.JPG 

 

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இருவரும் சேர்ந்து ஒரு வாக்கை செலுத்தி இருந்தனர். இந்த விவகாரம் அப்போது பத்திரிக்கைகளில் வெளியானது. இதையடுத்து இருவருக்கும் ஒரே வாக்கு வழங்கியது குறித்த விவாதங்கள் எழுந்தன. இருவருக்கும் தனித்தனி வாக்குகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

பாட்னா நீதிமன்ற உத்தரவுபடி 23 வயதாகும் சபா மற்றும் பராவுக்கு தனித்தனி வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இன்று முதன்முறையாக அவர்கள் தனித்தனியாக வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close