[X] Close

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு


7-1-38

  • kamadenu
  • Posted: 19 May, 2019 15:06 pm
  • அ+ அ-

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, 6 கட்ட தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக, பிஹார் (8), இமாச்சலபிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), மத்தியபிர தேசம் (8), பஞ்சாப் (13), உத்தர பிரதேசம் (13), மேற்குவங்கம் (9) மற்றும் சண்டிகர் (1) ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட 59 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிகஅகு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இறுதிகட்ட தேர்தலில் மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 1.12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை முதலே மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணிவரை 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 52.89 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் 47.55 சதவீதம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 43.89 சதவீதம் வாக்குகளும், பஞ்சாப்பில் 36.66 சதவீதம் வாக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 36.37 சதவீதம் வாக்குகளும், பீகாரில் 36.20 சதவீதம் வாக்குகளும், சண்டிகரில் 35.60 சதவீதம் வாக்குகளும், இமாச்சலப்பிரதேசத்தில் 34.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close