[X] Close

'இந்திரா காந்தி போல் நான் கொல்லப்படுவேன்: பாஜக என்னை கொல்ல திட்டமிட்டுள்ளது': கேஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 18 May, 2019 18:15 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போல் நான் ஒருநாள் எனது தனிப்பாதுகாவலர்களால் கொல்லப்படுவேன், என்னைக் கொல்ல பாஜக திட்டமிட்டுள்ளது என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரிவிந்த் கேஜ்ரிவாலி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் சென்றுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அதன்பின் இன்று  செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மூலமே என்னைக் கொல்வதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போன்று ஒருநாள் நானும் கொல்லப்படுவேன். என்னுடைய சொந்த பாதுகாப்பு அதிகாரிகள் பாஜகவிடம் சென்று பல அறிக்கையை அளிக்கிறார்கள். என்னை ஒருநாள் பாஜக கொன்றுவிடும் " எனக் குற்றம்சாட்டினார்.

இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் மோதி நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அரவிந்த் கேஜ்ரிவாலை, ஒருவர் கன்னத்தில் அறைந்தார். அது குறித்து போலீஸார் கூறுகையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் தொண்டர்தான் கேஜ்ரிவாலைத் தாக்கினார். கட்சி மீது அதிருப்தி அடைந்ததால், அந்த தொண்டர் அவ்வாறு செய்தார் என்றனர்.

போலீஸாரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அரவிந்த் கேஜ்ரிவால் " என்னை ஒருவர் கொலை செய்துவிடுவார், அதுகுறித்து கேட்டால் கட்சியின் அதிருப்தி தொண்டர் கொலை செய்துவிட்டார் என்று போலீஸார் கூறமுடியுமா. என்னை தாக்கியதற்கு என்ன அர்த்தம். காங்கிரஸ் தொண்டர் அதிருப்தி அடைந்து பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கை தாக்க முடியுமா, பாஜகதொண்டர் அதிருப்தி அடைந்து பிரதமர் மோடியை தாக்க முடியுமா" என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த டெல்லி போலீஸின் மக்கள் தொடர்பு அதிகாரி அனில் மிட்டல் கூறுகையில், " டெல்லி போலீஸார் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றனர். தங்கள் கடமை தவறாமல், அர்ப்பணிப்புடன் பணி செய்கிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லை " எனத் தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close