[X] Close

'லவாசா புகாரை விசாரிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு மோடி அரசு நெருக்கடி அளிக்கிறது': காங்கிரஸ் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 18 May, 2019 17:46 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மோடி அரசு அழிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும்,  மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், ராணுவத்தினரை சுட்டிக்காட்டியும் தேர்தல் பிரச்சாரங்களில் பேசுகின்றனர், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் எம்.பி.சுஷ்மிதா தேவ் 11 புகார்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த பேச்சில் எந்தவிதமான தவறும் இல்லை என தேர்தல் ஆணையம் 7 மனுக்கள் மீது நற்சான்று அளித்தது.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா, சுஷில்சந்திரா ஆகிய இருவரும் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் பேச்சுக்கு நற்சான்று அளித்ததாகவும், மற்றொரு ஆணையர் அசோக் லவாசா  எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

தேர்தல் விதிமுறை புகார்கள் குறித்து முடிவெடுக்கும் இந்த மூவர் குழு ஒரு மனதாக முடிவு எடுக்க வேண்டும் இல்லாவிட்டால், பெரும்பான்மை முடிவே இறுதியானது. ஆனால், பெருன்மையாக இரு ஆணையர்கள் முடிவெடுப்பதால், சிறுபான்மையாக இருக்கும் தன்னுடைய கருத்து பதிவாகாமல் இருப்பதாக லவாசா குற்றச்சாட்டு கூறியதாகத் தெரகிறது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படி லவாசா வேண்டுகோள் விடுத்தாகவும் இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோராவுக்கு, ஆணையர் அசோக் லாவாசா மே.4 கடிதம் எழுதியதாகம் தகவல் வெளியானது.  அதில் " பிரதமர் மோடி தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக புகார்களை ஆய்வு செய்யும் கூட்டத்தில் என்னுடைய கருத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படுகிறது" எனத் தெரவித்திருந்தார்.

தேர்தல் ஆணையர் லசாவின் குற்றச்சாட்டுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

rande[.jpg 

 " தேர்தல் ஆணையம் எனும் ஜனநாயக அமைப்பு வெற்று தேர்தல் அமைப்பாக மாறிவிட்டது. பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் தேர்தல் விதிமுறை பேச்சு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் நற்சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்த லவாசாவின் கருத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை. மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நன்சான்று வழங்குவதில் ஆணையம் மூழ்கிவிட்டது.

பட்டப்பகலில் அரசமைப்புச்சட்ட விதிமுறைகள், மரபுகள், மாண்புகள் அனைத்தும் கொல்லப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கள், முடிவுகள் ஒருமித்து இருக்க வேண்டும், ஆனால், பெரும்பான்மை அடிப்படையில், சிறுபான்மை இல்லாமல் செயல்படுகிறது. அரசமைச்சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்பு சிறுபான்மை உறுப்பினர் கருத்தை பதிவு செய்ய வேண்டும். இது பிரதமர் மோடி, அமித் ஷாவை காப்பாற்றும் முயற்சியாகும்.

மோடி தேர்தல் ஆணையத்துக்கு அளித்த அரசியல் நெருக்கடி, அழுத்தம் காரணமாக, லவாசாவின் கருத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை. லசாவின் எதிர்ப்புகளை ஒதுக்கிய தேர்தல் ஆணையர், பிரதமர் மோடிக்கு பெயரளவுக்கு நோட்டீஸ் மட்டும் அனுப்ப கேட்டுள்ளார். இது தேர்தல் ஆணையத்தின்  நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சியாகும்

தேசத்தில் உள்ள ஒவ்வொரு அரசமைப்புச் சட்ட அமைப்பின் புனிதத்தை இழிவுபடுத்தியும், சேதப்படுத்தியும், அழித்தும், குறைத்தும், சிதைத்தும் வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறுகையில், " தேர்தல் ஆணையர் லவாசா கூறிய குற்றச்சாட்டுகளில் நம்பகத்தன்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை, நம்பக்கத்தன்மை ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் காவலராக இருக்கும் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மையை பாதுகாக்க வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close