[X] Close

இந்து மதத்தைப் புரிந்து கொள்ள கமல் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்: கிரிராஜ் சிங்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 16:55 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

இந்து மதத்தைப் புரிந்து கொள்ள கமல் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

முன்னதாக, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கமலுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "கமலுக்கு இந்து மதத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. இந்துவுக்கு விளக்கம் நல்குவதைக் காட்டிலும் கமல் முஸ்லிமுக்கு அர்த்தம் கண்டறியலாம்.

கமல்ஹாசன் முஸ்லிம்களை அறிவுஜீவிகள் என அடையாளப்படுத்த விரும்புகிறார். ஆனால் ஓர் இந்துவை அவர் விவரிக்க வேண்டுமென்றால் உண்மையிலேயே 100 ஆண்டுகளாவது இந்து மதத்தைப் பற்றி அவர் படிக்க வேண்டியிருக்கும்.

இந்துக்களை விமர்சித்துப் பேசி அரசியலில் மிகப் பெரிய ஆள் ஆகலாம் என அவர் கனவு காண்கிறார். ஆனால், இது அவருக்கு சற்றும் உதவாது.

கமல்ஹாசன் கைது நடவடிக்கைக்கு அஞ்சக்கூடாது என்றும் சொல்லிக் கொள்கிறேன். இந்து மதத்தைப் புரிந்து கொள்ள கமல் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close