[X] Close

‘‘தேவையற்ற சர்ச்சை’’: அசோக் லவாசா அதிருப்தி விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் அறிக்கை


  • kamadenu
  • Posted: 18 May, 2019 14:12 pm
  • அ+ அ-

பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் நற்சான்று அளித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா அதிருப்தியில் உள்ளதாக வெளியான தகவல் தேவைற்ற சர்ச்சை என தலைமை தேர்தல் ஆணையர் அரோரா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும்,  மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், ராணுவத்தினரை சுட்டிக்காட்டியும் தேர்தல் பிரச்சாரங்களில் பேசுகின்றனர், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் எம்.பி.சுஷ்மிதா தேவ் 11 புகார்களைத் தெரிவித்திருந்தார்.

7 மனுக்கள் மீது தீர்வு கண்ட தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி, அமித் ஷா பேசியதில் தவறில்லை எனத் தெரிவித்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் 3 பேரில் ஒருவரான அசோக் லவாசா பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் பேச்சுக்கு நற்சான்று அளித்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது.

LAVASA.jpg 

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோராவுக்கு, ஆணையர் அசோக் லாவாசா மே.4 அன்று எழுதியுள்ள கடிதத்தில், சிறுபான்மை முடிவுகள் இறுதி செய்யப்படாத போது, தேர்தல் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்கமால் நான் விலகி இருக்கும் சூழல் ஏற்படுகிறது. கூட்டத்தில் நான் கலந்துகொள்வது அர்த்தமற்றதாகிறது’’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பான ஒன்று. 3 பேர் இருக்குமிடத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பார்வை இருக்கலாம். அனைவரும் ஒரே மாதிரி யோசிக்க முடியாது. அனைவருக்கும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இதற்கு முன்பும் தேர்தல் ஆணையத்தில் மாறுபட்ட கருத்துகள் இருந்துள்ளன. இது தேர்தல் காலம், வாக்குப்பதிவு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்பதால், அதற்கான நேரமில்லை,'' என்று தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close