[X] Close

ரேபெரேலியில் இந்திரா தோற்றதுபோல் வாரணாசியில் மோடி தோற்க வேண்டும்; அதுதான் வரலாற்று சிறப்பு: மாயாவதி கருத்து


  • kamadenu
  • Posted: 18 May, 2019 13:23 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வெற்றி பெறுவதைவிட தோற்றுப்போனால்தான் அது வரலாற்று சிறப்பு என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் "பிரதமர் மோடியில் குஜராத் மாதிரி வளர்ச்சித் திட்டம் என்பது உத்தரப் பிரதேசத்தில் எடுபடவில்லை. இங்கு வறுமையும் ஒழியவில்லை. வேலைவாய்ப்பு பிரச்சினையும் தீரவில்லை.

இது அப்பட்டமான வஞ்சகம். வளர்ச்சிக்குப் பதிலாக மோடி - யோகி என்ற இரட்டை இன்ஜின் கொண்ட இந்த அரசாங்கம் மதக் கலவரங்களையும், வெறுப்பு மற்றும் வன்முறையையும் மட்டுமே கொடுத்திருக்கிறது.

கிழக்கு உத்தரப் பிரதேசத்திற்கு உட்பட்ட கோரக்பூர் முதல்வர் யோகியின் தொகுதி, வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதி. ஆனாலும், கிழக்கு உத்தரப் பிரதேசம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகிறது.

பிரதமர் மோடி வாரணாசியில் வெற்றி பெறுவதைவிட தோல்வியுறுவதே வரலாற்று சிறப்பாக இருக்கும். 1977-ல் ரேபரேலியில் இந்திரா காந்தியை தோற்கடித்து மொரார்ஜி தேசாய் வெற்றி பெற்றார்.

இந்திராவின் தோல்வி வரலாறு ஆனதுபோல் மோடியின் தோல்வியும் வரலாறாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் நாளை 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியும் அடங்கும். வாரணாசியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால், வேட்புமனு தாக்கலின்போது பிரம்மாண்ட பேரணி மட்டும் மேற்கொண்டார்.

வாரணாசியில் காங்கிரஸ் சார்பில் அஜய் சிங், சமாஜ்வாதி கட்சி சார்பில் ஷாலினி யாதவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close