[X] Close

பிரதமர் மோடியின் பிரியாவிடை ‘மன் கீ பாத்’- பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து அகிலேஷ் கிண்டல்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 10:49 am
  • அ+ அ-

பிரதமர் மோடி டெல்லியில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு, அவரின் பிரியாவிடை ‘மன் கீ பாத்’ என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டலாக குறிபிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. நாளை 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன. 7-ம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து, பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதால், ஏராளமான கேள்விகளை நிருபர்கள் கேட்க தயாராக இருந்தனர்.

ஆனால், பிரதமர் மோடி சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு, ‘பாஜக தலைவர் அமித் ஷாவுவின் செய்தியாளர் சந்திப்பு, எங்கள் கட்சியின் தலைவர் அவர்தான், கட்சிக் கட்டுப்பாடுகளை நாங்கள் மதித்து நடக்க வேண்டும்’ என்றார். இதனால் பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தநிலையில் பிரதமர் மோடியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இதுகுறித்து கூறுகையில் ‘‘ பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கீ பாத்’ என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்றுவார். அந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோடை டிவி மூலம் நிகழ்த்தியது போல் இருந்தது.

இது பாஜகவின் பிரியாவிடைக்கான (Farewell) பத்திரிகையாளர் சந்திப்பு.  பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முடியாமல் அமைதியாக இருக்கும் நிலையே ஏற்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close