[X] Close

அடுத்த முறை  ஓரிரு கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க அமித் ஷா அனுமதிப்பார்: மோடியை ராகுல் கிண்டல்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 20:26 pm
  • அ+ அ-

5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பில் முகம் காட்டிய பிரதமர் மோடி கேள்விகளை எதிர்கொள்ளவில்லை அதனை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு விட்டு விட்டார்.

 

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி, " நான் உங்களுடைய கேள்விகள் எதற்கும் பதில் அளிக்க முடியாது.ஏனென்றால், இது பாஜக தலைவர் அமித் ஷா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு.

 

பாஜக முறைப்படி, ஒழுக்கத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கட்சியின் ஒழுக்கமான தொண்டர்கள் நாங்கள். ஆதலால் எங்களுக்கு எல்லாமே கட்சியின் தலைவர்தான். ஆதலால், கேள்விகளை அவரிடமே கேளுங்கள்" என்று தெரிவித்து ஒதுங்கிக் கொண்டார்.

 

இதனை ஓரளவுக்கு வரவேற்ற ராகுல் காந்தி சற்றே கிண்டலாகத் தன் ட்விட்டர் பக்கத்தில்

 

“வாழ்த்துக்கள் மோடிஜி. பிரமாதமான சந்திப்பு!! முகத்தைக் காட்டுவதே பாதிப் போராட்டம். அடுத்த முறை அமித் ஷா ஓரிரு கேள்விகளுக்கு உங்களை பதில் அளிக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கலாம். வெல் டன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

 

இதற்கு முந்தைய ட்வீட்டில் ராகுல் காந்தி , பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்ன என்பதை இறுதியாக வந்தடைந்தேன், இவர்கள் கடவுளை நேசிப்பவர்களல்லர், கோட்ஸேயை நேசிப்பவர்கள் என்பதை ஆங்கில மொழி சிலேடையாக, Are not God-Ke Lovers. They are God-Se Lovers.

 

என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close