[X] Close

ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்டுள்ள லோக்பாலில் புகார் தெரிவிக்க தனி வசதி


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:42 am
  • அ+ அ-

ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்டுள்ள லோக்பால் அமைப்பில் புகார் தெரிவிப்பதற்கான பிரத்யேக படிவத்தை மத்திய அரசு விரைவில் வெளியிடவுள்ளது.

நடைமுறையில் உள்ள விதிகளின்படி, அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட, படிவம் மூலமாக புகார்கள் தெரிவிக்க வேண்டும்.

இந்த படிவம் விரைவில் வெளியிடப்படும் என ஊழியர்கள் துறை அமைச்சக மூத்த அதிகாரிதெரிவித்தார்.

இப்போதைய நிலையில், புகாரை தெரிவிக்க தனியாக படிவம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தமது அலுவலகத்தில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் எத்தகைய வடிவில் புகார்கள் பெறப்பட்டிருந்தாலும் அவற்றை பரிசீலிக்க லோக்பால்அமைப்பு முடிவுசெய்துள்ளது.

இந்த தகவல் லோக்பால் அமைப்புக்காக நேற்றுவெளியிடப்பட்ட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசீலனையின்போது, அலுவலகத்துக்கு வந்த புகார்கள் தமது விசாரணை வரம்புக்குள் வராததாக இருந்தால், அவற்றின் மீதான நடவடிக்கை முடிக்கப்படுவதாக அறிவித்து அது தொடர்பான விவரம், புகார் தெரிவித்த நபர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.lokpal.gov.in என்ற இணையதள முகவரியை லோக்பால் தலைவர் நீதிபதி பினாகி சந்திர கோஷ் மற்ற 8 உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று தொடங்கி வைத்தார்.இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி லோக்பால் அலுவலகம் டெல்லி சாணக்யபுரியில் உல்ள தி அசோக் ஓட்டலில் செயல்படும்.

லோக்பால் தலைவர் நீதிபதி பினாகி சந்திர கோஷுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த மார்ச் 23-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதேபோல், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதிபதிகள் திலிப் பி போசலே, பிரதீப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, அஜய் குமார்திரிபாதி ஆகியோர் லோக்பால் அமைப்பின் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

நீதித்துறை சாராத உறுப்பினர்களாக சஷாஸ்திர சீமா பால் அமைப்பின் முன்னாள் தலைவரான அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிரா முன்னாள் தலைமைச் செயலர் தினேஷ் குமார் ஜெயின், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி மகேந்தர் சிங், குஜராத் தொகுப்பு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இந்திரஜித் பிரசாத் கவுதம். ஆகியோரும் பதவியேற்றுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close