[X] Close

'மம்தா பானர்ஜி ஒரு பாசிஸ்ட்; ஜனநாயக விரோதி': பாஜக சரமாரி தாக்கு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 16:23 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

மம்தா பானர்ஜி ஒரு பாசிஸ்ட்; ஜனநாயக விரோதி என விமர்சித்துள்ளார் மேற்குவங்க பாஜக செய்தித்தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளைக் காட்டி கோஷமிட்டனர்.

இதனால்,  ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஷ்வர சந்திர வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது.

போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கல்வீச்சு தாக்குதல், போலீஸ் தடியடியில் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து மம்தாவும் அமித் ஷாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ், "மம்தா பானர்ஜி மிகப்பெரிய பாசிஸ்ட். அவர்தான் நடந்த வன்முறைகளுக்கு முழு காரணம். ஆனால், எங்களது தொடர் கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து மம்தா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்யாமல் தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டாமா? திரிணமூல் காங்கிரஸை ஆதரிக்காத ஒவ்வொருவரையும் நான் பழி வாங்குவேன் எனக் கூறுகிறார் பானர்ஜி. மக்களால் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட ஒருவர் இப்படி மக்களையே மிரட்டுவதைக் காட்டிலும் ஜனநாயகத்துக்கு ஏதாவது அச்சுறுத்தல் இருக்க இயலுமா?" என விமர்சித்துள்ளார்.

இதற்கிடையில், கலவரத்தில் உடைக்கப்பட்ட ஈஷ்வர சந்திர வித்யாசாகர் சிலையை பிரம்மாண்டமாக தான் அமைத்துத் தருவதாக பிரதமர் மோடி வாக்களித்துள்ளார். அதனை மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close