[X] Close

பாஜகவின் பணம் வேண்டாம்; நாங்களே சிலையை அமைப்போம்: மோடிக்கு மம்தா பானர்ஜி பதில்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 14:54 pm
  • அ+ அ-

கொல்கத்தாவில் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை அமைக்க பாஜகவின் பணம் வேண்டாம், நாங்களே சிலையை அமைப்போம் என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.

பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஸ்வர சந்திர வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைக்கப்பட்டது.  இந்த கலவரத்துக்கு பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸூம் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது ‘‘வங்கத்தின் தத்துவ மேதை ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை சேதப்படுத்திவயர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதே இடத்தில் பிரமாண்ட ஐம்பொன் சிலை அமைக்கப்படும்’’ என தெரிவித்தார்.

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் மந்திர்பஜார் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘கொல்கத்தாவில் ஈஸ்வர் சந்திர வித்தியாசாகர் சிலையை மீண்டும் அமைப்பதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். அவர்கள் பணத்தில் நாம் ஏன் அந்த சிலையை அமைக்க வேண்டும். மேற்குவங்க அரசிடம் போதுமான பணம் உள்ளது. நாங்களே அந்த சிலையை அமைப்போம்.

சிலைகளை உடைப்பது என்பது பாஜகவின் பழக்கம். இங்கு மட்டுமல்ல திரிபுராவிலும் அவர்கள் சிலைகளை உடைத்தனர். தற்போது ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளனர். மேற்குவங்கத்தின் 200 ஆண்டுகால பண்பாட்டை பாஜக அழிக்க பார்க்கிறது. நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

சமூகவலைதளங்கள் வாயிலாக அவர்கள் திரிணாமுல் காங்கிரஸூக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close