[X] Close

ரஃபேல் பேரம் குறித்து விவாதிக்க தயாரா?- பிரதமர் மோடிக்கு சித்து சவால்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 14:34 pm
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

ரஃபேல் பேரம் குறித்து விவாதிக்க தயாரா என பிரதமர் மோடிக்கு பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து சவால் விடுத்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிலாஸ்பூரில் நடந்தபிரசாரக் கூட்டத்தில் அவர்  கலந்துக் கொண்டு பேசியதாவது:

‘‘பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒன்றை மட்டும் இந்த நாட்டுக்கு தெளிவு படுத்த வேண்டும். ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததா இல்லையா என்பதை அவர் வெளிப்படையாக பேச வேண்டும். நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று அவருடன் இதுபற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் என்னை தோற்கடித்தால் அரசியலை விட்டு விலக தயாராக உள்ளேன்.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் கங்கையின் புதல்வன் எனக் கூறி அவர் வெற்றி பெற்றார். பதவிக்காலம் முடிந்து தற்போது, அவர் ரபேல் ஏஜெண்டாக வெளியேறுகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  உயர்ந்த தவைர். அவர் நாட்டின் பீரங்கி,  நான் ஏகே 47 துப்பாக்கி போல் உள்ளேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி’’.

இவ்வாறு சித்து பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close