[X] Close

ஈஸ்வர் சந்திர வித்யாசாகருக்கு பிரமாண்ட சிலை: பிரதமர் மோடி உறுதி


  • kamadenu
  • Posted: 16 May, 2019 14:14 pm
  • அ+ அ-

வங்கத்தின் தத்துவ மேதை ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை சேதப்படுத்திவயர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதே இடத்தில் பிரமாண்ட ஐம்பொன் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோஷமிட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பாஜக தொண்டர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஸ்வர சந்திர வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைக்கப்பட்டது.

இந்த கலவரத்துக்கு பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸூம் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் உத்தர பிரதேச மாநிலம் மனுவில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது இதுகுறித்து குறிப்பிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

கொல்கத்தாவில் அமித் ஷா கலந்து கொண்ட பாஜக பிரச்சாரக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தியதை நாடே பார்த்தது. வங்கத்தின் தத்துவ மேதை ஈஸ்வர் சந்திர வித்யாசகர் சிலையையும் சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வித்யாசாகரின் கனவை நாங்கள் நனவாக்குவோம். அவரது அறிவார்ந்த சிந்தனையை நாங்கள் மதிக்கிறோம். சிலை உடைக்கப்பட்ட இடத்தில் அவருக்கு ஐம்பொன்னில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close