[X] Close

ஆல்வார் பாலியல் பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகுல் நேரில் ஆறுதல்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 13:04 pm
  • அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்து ராகுல் காந்தி உரையாடினார். பாதிக்கப்பட்ட அவர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர்  வாக்குறுதி அளித்தார்.

ஆல்வார் பாலியல் பலாத்கார சம்பவத்தை மூடி மறைப்பதாக ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு மீது பிரதமர் மோடியும், உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியும் குற்றஞ்சாட்டி வரும் வேளையில் ராகுல் இன்று ஆல்வார் சென்றிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றனர். நீதி நிலைநாட்டப்படும். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ராகுல் காந்தியுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் சென்றிருந்தார். அவர் பேசும்போதும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார்.

மாயாவதி குற்றச்சாட்டு

ராஜஸ்தானில் ஏப்ரல் 29, மே 6 என்று இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.

பாலியல் பலாத்கார சம்பவம் ஏப்ரல் 26-ம் தேதி நடந்திருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் அரசு இச்சம்பவம் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டது. போலீஸ் எஃப்ஐஆர் கூட மே 7-ம் தேதி தேர்தல் முடிந்த பின்னரே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதே மாயாவதியின் குற்றச்சாட்டு.

நடந்தது என்ன?

கடந்த ஏப்ரல் 26-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அவ்வழியாக வேறு சிலர் பைக்கில் வந்துள்ளனர். அவர்கள் அந்தப் பெண்ணை தூக்கிச் சென்றனர்ர்.

தடுத்து நிறுத்த முயன்ற கணவரை மோசமாகத் தாக்கினர். வன்முறைக்கு உள்ளான பெண்ணும் கணவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இச்சம்பவம் தொடர்பாக இந்திர ராஜ் குஜ்ஜார், மகேஷ் குஜ்ஜார், அசோக் குஜ்ஜார், ஹன்ஸ்ராஜ் குஜ்ஜார், சோட்டே லால் குஜ்ஜார், முகேஷ் குஜ்ஜார் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close