[X] Close

சுதந்திரத்தையும், நம்பகத்தன்மையையும் தேர்தல் ஆணையம் இழந்துவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 12:16 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

தேர்தல் ஆணையம் அதன் சுதந்திரத்தையும், நம்பகத்தன்மையயும் இழந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் நியமனங்களை மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தை முன்பாக முடித்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் காட்டமாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

''மேற்கு வங்கத்தில் 20 மணிநேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்திருப்பது இந்திய ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்பான தேர்தல் ஆணையத்தன் மீதானா கரும்புள்ளி.

தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டம் பிரிவு 324ன் கீழ் தனது கடமையில் இருந்து முற்றிலும் விலகிச் செயல்படுகிறது. ஆதலால், தேர்தல் ஆணையத்தின் நியமனங்கள் குறித்த மறு ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. இதுகுறித்து தேசிய அளவில் விவாதத்தை எழுப்ப வேண்டும்.

காங்கிரஸ் கட்சி ஒருபொறுப்புள்ள கட்சி. ஒருபோதும் ஜனநாயக அமைப்பில் இருக்கும் அமைப்புகளை தேவையின்றி அவமதிக்காது. ஆனால்,  வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். தேர்தல் ஆணையம் அதன் சுதந்திரத்தையும், நம்பகத்தன்மையையும் இழந்து செயல்படுகிறது''.

இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close