கத்தியால் குத்திய பிரபல ரவுடியைச் சுட்டுப்பிடித்த போலீஸார்!


போலீஸ்காரரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோட முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஷிமோகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஷிமோகாவைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ரசாக். இவர் மீது கொலை முயற்சி உள்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ரவுடி ரசாக் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள குன்சி காவல் நிலைய எல்லைக்குட்படட வஸ்தவல்லி காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் இன்று அதிகாலை அப்பகுதியை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

அப்போது, ரசாக்கைப் பிடிக்க முயன்ற அர்ஜூன் என்ற போலீஸ்காரரை மறைத்து வைத்திருந்த கத்தியால் ரசாக் தாக்கினார். அப்போது தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, ரவுடி ரசாக் காலில் துப்பாக்கியால் சுட்டார். இதனால் காயமடைந்த ரசாக் சுருண்டு விழுந்தார். இதையடுத்து ரவுடி ரசாக், கத்தியால் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த போலீஸ்காரர் அர்ஜூன் ஆகிய இருவரும் ர் மெக்கன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன்பின் ஓலேஹனூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், ரசாக்கை கைது செய்தனர். இந்த சம்பவம் ஷிமோகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.