[X] Close

குஜராத்தில் நெகிழ்ச்சி சம்பவம்: மணமகள் இல்லாத திருமண விழா; மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:21 am
  • அ+ அ-

குஜராத் மாநிலத்தில் கற்றல் குறைபாடு கொண்ட இளைஞருக்கு மணமகள் இல்லாமல் திருமண விழா நடத்தப்பட்டது.

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டம் ஹிம்மத்நகரைச் சேர்ந்தவர் அஜய் பரோட். 27 வயதான இந்த இளைஞர் கற்றல் குறைபாடு உள்ளவர். பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. ஊரில் நடக்கும் திருமண விழாக்களை பார்த்த அஜய் பரோட்டுக்கு தானும் அதுபோல குஜராத்தி வழக்கப்படி குதிரை மீது அமர்ந்தபடி மணமகனாக ஊர்வலமாகச் செல்லவேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனது ஆசையை அரசு போக்குவரத்து நிறுவனத்தில் நடத்துனராக பணியாற்றும் தனது தந்தை விஷ்ணுபாய் பரோட்டிடம் தெரிவித்தார். குடும்பத்தினருடன் கலந்து பேசிய விஷ்ணுபாய், தனது மகனி்ன் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார். தனது மகனுக்கு யாரும் பெண்தர மாட்டார்கள் என்று முடிவுசெய்து மணமகள் இல்லாமல் திருமண விழாவை நடத்த முடிவு செய்தார்.

அதன்படி, மற்ற திருமணங்களைப் போலவே மாப்பிள்ளை போன்று அஜய் பரோட் அலங்கரிக்கப்பட்டு குதிரை மீது அமர்ந்தபடி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்றார். உறவினர்களும் நண்பர்களும் ஆடிப்பாடிச் சென்றனர். பெண்களுக்கு மருதாணி இடும் மெஹந்திநிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கானோருக்கு கல்யாண விருந்தும் பரிமாறப்பட்டது. இந்த விழாவுக்காக ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டது. மணமகள் மட்டும் இல்லை.

இதுகுறித்து அஜய் பரோட்டின் தந்தை விஷ்ணுபாய் பரோட் கூறுகையில், ‘‘எனது மகன் கற்றல் குறைபாடு உள்ளவன். சிறுவயதிலேயே தாயையும் இழந்துவிட்டான். மற்ற திருமண விழாக்களைப் பார்த்து தனக்கும் அதுபோல விழா நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனுக்கு ஏற்ற ஜோடியை கண்டுபிடிப்பது கடினம் என்பதால் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசி மணமகள் இல்லாமல் திருமண விழா நடத்த முடிவு செய்தேன். இப்போது என் மகனின் கனவு நிறைவேறிவிட்டது. இந்த சமூகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என் மகனின் ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளேன்’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close