[X] Close

ரூ.10 கோடியை விடுவிக்க கோரும் கார்த்தி சிதம்பரத்தின் மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


10

  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:21 am
  • அ+ அ-

டெபாசிட் தொகை ரூ.10 கோடியை விடுவிக்க வேண்டும் என்று கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க மறுத்துவிட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ்மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.

இந்நிலையில் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி முறையிட்டார். இதனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி 30-ம் தேதி விசாரித்தபோது, ரூ.10 கோடி டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.

இந்த தொகையை செலுத்திய கார்த்தி, வெளிநாடு சென்று வந்தார். பிறகு கடந்த வாரம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய கார்த்தி, “சர்வதேச டென்னிஸ் போட்டிகளுக்காக அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி செல்லஅனுமதிக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து மற்றொரு ரூ.10 கோடி டெபாசிட் செய்ய உத்தரவிட்ட தலைமை நீதிபதி, கார்த்தியின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கினார்.

இந்நிலையில் ஏற்கெனவே செலுத்திய ரூ.10 கோடி டெபாசிட்தொகையை விடுவிக்க கோரிகார்த்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோரின் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி தரப்பில், “டெபாசிட் தொகை செலுத்துவதற்கு கார்த்தி கடன் பெற்றுள்ளார். இதற்காக அவர் வட்டி செலுத்தி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.

கார்த்தியின் கோரிக்கையை நீதிபதிகள் பரிசீலிக்க மறுத்தனர்.

இந்த விஷயத்தில் அவசரம் ஒன்றுமில்லை என்றும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் முறையிடுமாறும் கூறினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close