உயிருடன் பாம்பைக் கடித்துத் தின்ற கொள்ளையன்... பதற வைக்கும் வீடியோ!


ஆற்றில் பாம்பைப் பிடித்து கொள்ளையன் ஒருவர் உயிருடன் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஃபதேபூரில் உள்ள கண்மாயில் அமர்ந்திருந்த ஒருவர், திடீரென பாம்பை பிடித்து கரைக்கு கொண்டு வந்துள்ளார். இதன்பின் கரும்பைக் கடித்துச் சாப்பிடுவது போல அந்த பாம்பைக் கடித்து அந்த நபர் சாப்பிட ஆரம்பித்தார். இதை சிலர் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளன. இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள ஃபதேபூரைச் சேர்ந்த கொள்ளையன் கங்கா பிரசாத் என்பவர் தான் இப்படி பாம்பை உயிருடன் பிடித்து கடித்துச் சாப்பிட்டவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கங்கா பிரசாத், சமீபத்தில் தான் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். நீரிலும், நிலத்திலும் உள்ள பாம்புகளைப் பிடித்து அவர் தின்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக சிறையில் இருந்த கங்கா பிரசாத், பாம்பைக் கடித்து தின்றதன் மூலம் செய்திகளின் இடம் பிடித்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.