[X] Close

காரில் போகும்போது ‘மோடி மோடி’ என்று கோஷம்: கோஷமிட்டவர்களை வாயடைக்கச் செய்த பிரியங்காவின் எதிர்பாரா செயல்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 21:04 pm
  • அ+ அ-

மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரத்திற்கு பிரியங்கா காந்தி சென்ற போது அவர் கார் போகும் வழியில் சிலர் சாலையின் ஓரமாக நின்று கொண்டு மோடி.. மோடி என்று கோஷமிட்டனர்.

 

இதனையடுத்து கோஷமிட்டவர்களே ஆச்சரியப்படுமாறு காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கிய பிரியங்கா காந்தி அவர்கள் அருகே வந்து கோஷமிட்டவர்களுக்கு கை கொடுத்து  ‘நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்குதான் இருக்கிறீர்கள். நான் எங்கு இருக்கிறேனோ அங்குதான் நான் இருக்கிறேன்’ என்று கூறிவிட்டு புன்னகையுடன் அவர்களுடன் உரையாடி ஆல் த பெஸ்ட் என்றார். இது குறித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வளைய வருகிறது.

 

பிரியங்காவின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

 

பிரியங்காவின் இந்தச் செயல் பாஜக ஆதரவாளர்களை ஆச்சரியப்படுத்தியது,  அவர்களும் பிரியங்காவுக்கு ‘ஆல் த பெஸ்ட்’ என்று கூறினர்,

 

கூட்டத்தில் ஒருவர் பிரியங்காவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் நடந்தது.

 

இந்தூரில் நடந்த இந்தச் சம்பவம் காங்கிரஸாரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. பிரியங்காவுடன் ம.பி. முதல்வர் கமல்நாத்தும், சட்டிஸ்கர் முதல்வர் பூபேச் பாகெலும் இருந்தனர்.

 

பிரியங்கா வீடியோ 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close