[X] Close

பிரதமர் மோடியின் உண்மை இப்போது மக்கள் ராடார் பார்வையில் உள்ளது: பிரியங்கா காந்தி பேச்சு


  • kamadenu
  • Posted: 14 May, 2019 18:41 pm
  • அ+ அ-

பாலகோட் தாக்குதல் குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி அளித்த பேட்டியில் ‘மேகம்-ராடார்’ என்று பேசியது சமூகவலைத்தளங்கள் மட்டுமல்லாது பல இடங்களிலும் பலத்த கேலிக்குள்ளான நிலையில் பிரியங்கா வத்ரா தேர்தல் பிரச்சாரத்தில் அதைச் சூசகமாகத் தெரிவிக்குமாறு ‘இப்போது மக்களின் ராடார் பார்வையின் கீழ் பிரதமரின் உண்மை வந்துள்ளது’ என்று பேசினார்.

 

பஞ்சாப் மாநிலம் பாத்திந்தாவில் பிரியங்கா காந்தி பேசியதாவது:

 

அரசியல் லாபங்களுக்காக பொய்களின் அரசியல் செய்கிறார் மோடி.  பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம்-பாஜக ஆட்சி மாநிலத்தை போதைப்பொருள், மது, மணல் மற்றும் போக்குவரத்து மாஃபியாக்கள் வசம் 10 ஆண்டுகால ஆட்சியில் ஒப்படைத்ததுதான் நடந்தது.  பஞ்சாப் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக பாஜக, அகாலிதளமே காரணம்.

 

பஞ்சாபிகள் தேச விடுதலைக்காக பிரிட்டீஷாரை எதிர்த்துப் போராடிய போது, ஆர்.எஸ்.எஸ். தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பிரிட்டீஷார் காலில் விழுந்தனர்.

 

பிரதமர் மோடி பேசுவதைக் கேட்டால் ஏதோ இவர்கள் ஆண்ட இந்த 5 ஆண்டுகளில்தான் வளர்ச்சி இருப்பது போல் பேசுகிறார். பத்திந்தா பெரிய தொழிற்துறை இடம், வேளாண்மைக்கான இடம், இங்கு தொழிற்துறையும் வேளாண்மையும் அபரிமிதமான வளர்ச்சி அவர் விமர்சனம் செய்யும் அந்த 70 ஆண்டுகால ஆட்சியில்தான்.

 

ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றார் ஆனால் ஒருவருக்குக் கூட அந்தத் தொகை வந்ததாகத் தெரியவில்லை. விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும் என்றா இரட்டிப்பாகவில்லை. பணவீக்கமும் இந்த 5 ஆண்டுகளில் குறையவில்லை.

 

இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் 5 கோடி பேருக்கு வேலைபோனதுதான் இந்த அரசின் சாதனை. 24 லட்சம் அரசுப் பணி காலியிடங்கள் உள்ளன. பணமதிப்பு நீக்கத்தில் மட்டும் 50 லட்சம்பேர் வேலை இழந்துள்ளனர்.

 

இவ்வாறு பேசினார் பிரியங்கா காந்தி.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close