[X] Close

இரோம் ஷர்மிளாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள்: அன்னையர் தினத்தில் மகிழ்ச்சி


  • kamadenu
  • Posted: 13 May, 2019 15:38 pm
  • அ+ அ-

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து போராடிய  இரோம் ஷர்மிளாவுக்கு (வயது 47) இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

வட கிழக்கு மாநிலங்களைக் கடந்த 60 வருடங்களாகத் தொடரும் ராணுவப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) எதிர்த்து 16 ஆண்டு காலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இரோம் ஷர்மிளா, தன்னுடைய உண்ணாவிரத முடிவுக்குப் பின் அரசியலைத் தேர்ந்தெடுத்தார்.

மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் மாநில முதல்வரை எதிர்த்து அவர் நின்றார். தோல்வி அடைந்ததுகூடத் துயரம் அல்ல; நோட்டாவைவிடக் குறைவாக, வெறும் 90 வாக்குகளில் அவர் அடைந்த தோல்வி, எல்லோரையுமே அதிரவைத்தது. பலரைக் கலங்கவும் செய்தது. தோல்வியின் தொடர்ச்சியாக அரசியல் ஓய்வை அறிவித்தார் ஷர்மிளா.

அதன்பிறகு பொதுவாழ்வு, போராட்டங்களில் இருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக் கொண்ட ஷர்மிளா, பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற தனது நீண்டகால காதலர் டெஸ்மாண்ட் கொடின்ஹோவை 2017-ம் கொடைக்கானலில் திருமணம் செய்துகொண்டார்.  பின்னர் அவர்கள் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில், இரோம் ஷர்மிளா கர்ப்பமடைந்ததை தொடர்ந்து பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்னையர் தினமான அவருக்கு நேற்று இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தைகளுக்கு நிக்ஸ் ஷகி மற்றும் ஆட்டமன் தாரா என பெயரிட்டப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close