[X] Close

‘‘என்னை தடுக்கலாம்; பாஜக வெற்றியை தடுக்க முடியாது’’- மம்தாவுக்கு அமித் ஷா சவால்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 14:27 pm
  • அ+ அ-

மேற்குவங்கத்தில் நான் பிரச்சாரம் செய்வதை வேண்டுமானால் மம்தா பானர்ஜியால் தடுத்து நிறுத்த முடியும், ஆனால் பாஜக வெற்றி பெறுவதை அவரால் தடுத்து நிறுத்த முடியாது என பாஜக தலைவர் அமித் ஷா பேசினார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 7- கட்டங்களாக நடைபெற்று வருகறது. ஏற்கெனவே ஆறு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிகட்ட தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் மேற்குவங்க மாநிலத்திலும் சில தொகுதிகளில் இறுதிகட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா  பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த பாஜக  முடிவு செய்தது. மொத்தம் 3 இடங்களில் பிரச்சாரம் செய்ய அவர் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் ஜாதவபூர் உள்ளிட்ட இடங்களில் அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்குவங்க அரசு அனுமதி மறுத்தது. . ஏற்கெனவே பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த கூட்டங்களுக்கும் பாதுகாப்பு காரணங்களை காட்டி மேற்குவங்க அரசு அனுமதி மறுத்தது. இதனால் பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர்.

ஜாதவ்பூர் பொதுக்கூட்டம் நாளைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதேசமயம் மேற்குவங்க மாநிலம், ஜாய்நகர் மக்களதைத் தொகுதியில் அமித் ஷா கலந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜெய் ஸ்ரீராம் என்று யாராவது கோஷமிட்டால் மம்தா பானர்ஜிக்கு கோபம் ஏற்படுகிறது. ஜெய் ஸ்ரீராம் என்று நான் இன்று கோஷமிடுகிறேன். தைரியமிருந்தால் என்னை நீங்கள் கைது செய்யுங்கள். நாளை நான் கொல்கத்தாவில் இருப்பேன்.

மம்தா பானர்ஜி பயத்தால் பீடிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் நான் பிரச்சாரம் செய்வதை தடுக்க நினைக்கிறார். என்னை வேண்டுமானால் நீங்கள் தடுத்து நிறுத்தலாம். ஆனால் மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெறுவதை உங்களால் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேற்குவங்க தேர்தல் களத்தில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸூம் நேரடியாக மோதி வருகிறது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close