[X] Close

ஒடிசாவில் சிஆர்பிஎப் முகாம் அருகே அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்புகள்


2

  • kamadenu
  • Posted: 12 May, 2019 19:54 pm
  • அ+ அ-

ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் முகாம் அருகே அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன, உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

இந்தக் குண்டுவெடிப்புகள் மாவோயிஸ்ட் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

இந்தத் தாக்குதலில் உயிரிழப்போ, சொத்துக்கள் சேதமோ ஏற்படவில்லை என்று காவலதிகாரி பி.கங்காதர் தெரிவித்தார்.

 

திரிலோசன்பூரில் சிஆர்பிஎஃப் முகாம் அமையும் இடத்திற்கு 200 மீ தொலைவில் ஒதுக்குப்புறமான இடத்தில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது, இரண்டாவது குண்டுவெடிப்பு அம்பகவுடா சவுக் அருகே, ஜவான்கள் முதல் குண்டு வெடிப்பு இடத்துக்குச் செல்லும்  பாம் ஸ்குவாடிற்கு பாதுகாப்பாக இருந்த இடத்துக்கு சில மீட்டர்கள் தள்ளி ஏற்பட்டுள்ளது.

 

இதனையடுத்து போலீஸாரும் சிஆர்பிஎஃப் ஜவான்களும் தேடுதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திரிலோசன்பூர் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பகுதியாகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close