[X] Close

இங்கு பிணமாக வாழ்வதற்குப் பதில் சாவதே மேல்..: வங்கதேசத்தவர் என்று தவறாகக் கைது செய்து, கொண்டு செல்லப்பட்ட அசாம் கிராமப் பெரியவர்- ஒரு வேதனை ரிப்போர்ட்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 18:59 pm
  • அ+ அ-

-ராகுல் கர்மாகர்

ஏதோ ஒரு சட்டத்தைக் காரணம் காட்டி அஸாம் கிராமத்திலிருந்து பெரியவர் ஒருவரை ‘வங்கதேசத்தவர்’ என்று பிடித்துச் சென்று தடுப்புக் காவல் மையத்தில் வைத்து 3 ஆண்டுகள் கழித்து அவர் ‘இந்தியர்தான்’ என்று விடுவித்துள்ளனர்.

 

மே 7ம் தேதி அசாமில் உள்ள கோல்பரா மத்தியச் சிறையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக ரெஹத் அலி என்ற இவர் ஜெயில் அதிகாரியிடம் ’தான் 3 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த தன் ‘காவல் மையத்தை’ப் பற்றி வெளியில் வாய் திறக்க மாட்டென் என்று வாக்குறுதி அளித்தார்.

 

இது சிறையும்தான், தடுப்புக் காவல் மையமும்தான், இது போன்று சிறையும் தடுப்புக் காவல் மையமுமாக 6 இருக்கின்றன அஸாமில். இங்கு அயல்நாட்டினர் தீர்ப்பாயம் (Foreigners’ Tribunal-FT) அசாம் எல்லைப் போலீஸ் யாரையெல்லாம் வங்கதேசத்தவர் என்று சந்தேகிக்கிறதோ அவரை இங்கு கொண்டு நிறுத்துவர், இது அவர்களை தடுப்புக் காவல் முகாம்/ஜெயிலுக்கு அனுப்பிவிடும்.  இது முதலில் 1962-ல் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி வருபவர்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்டதாகும்.

 

இந்நிலையில் அசாம் கிராமத்திலிருந்து வங்கதேசத்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்ட ரெஹத் அலி தன் சிறை அதிகாரியிடம், தன்னுடைய வார்த்தைகளகக் கூறியதை தெரிவித்துள்ளார் அதாவது, “இங்கு (தடுப்புக் காவல் முகாம்/ஜெயில்) பிணமாக வாழ்வதை விட சாவதே மேல்” என்று கூறிஉள்ளதாகத் தெரிவித்தார்.

 

இவர் தடுப்புக்காவல் மையத்துக்கு கொண்டு செல்லப்பட கதை:

 

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் ஆரம்பப்பள்ளியிலிருந்து கல்வியைத் தொடர முடியாமல் பாதியில் விட்டவர். எண்கள் பற்றிய அறிவெல்லாம் இவருக்கு இல்லை. இவரது வாக்காளர் அடையாள அட்டை இவர் வயதை 55 என்று கூற, இவர் தன் வாயால் கூறும்போது 66 என்று கூறிவிட்டார். தீர்ப்பாயத்திடம் இப்படிச் சொன்னால் போதும்தானே.. ஹாஜோ என்ற ஊரில் தீர்ப்பாயத்திடம் இவர் இவ்வாறு தெரியாமல் தவறாகக் கூற இதுவே இவரை தடுப்புக் காவல் மையத்துக்கு இட்டுச் செல்ல பிரதான காரணமாக அமைந்தது.  இதுதான் இவரது குடியுரிமை பற்றிய சந்தேகத்தை அயல்நாட்டினர் குறித்த தீர்ப்பாயத்துக்கு ஏற்படுத்த போதுமானதாக இருந்தது!

 

நல்பாரி மாவட்டத்தில் இருந்த பக்னபோட்டாவில் பிரம்மபுத்திரா நதியில் அரிப்பு ஏற்பட்டதால் இவரது தந்தை முனிருதீன் அந்த ஊரிலிருந்து குடிபெயர்ந்ததையும் இவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. இவரது பெயரும் வெவ்வேறு இடங்களில் ரெஹத் அலி என்றும் ரெஹாஜா அலி என்றும் ஆவணங்களி பதிவாகியிருந்தது.

 

முகாமில் இருந்த நாட்கள்தன இவருக்கு எண்ணிக்கையைக் கற்றுக் கொடுத்தது, ஆனால் இதே முகாமில் நான்குபேர் மன அழுத்தத்தில் இறந்து போய்விட்டனர்.  “நான் பங்களாதேஷியாக எண்ணப்பட்ட முகாம் நாட்களை நான் மறக்க முடியுமா? விடுதலையாகி வெளியேறும் முன்பு சுமார் 1,197 நாட்கள் என்னிடமிருந்த இந்திய உணர்வை கொன்று விட்டனர்.

 

எப்படியிருந்தாலும் இந்த ‘நரகத்திலிருந்து’ தன்னை தன் சகோதரி மன்பஹார் பீபி காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை மட்டுமே முகாமில் தான் காலந்தள்ள போதுமானதாக இருந்தது என்கிறார் ரெஹத் அலி.  இதில் கொடூரமான உண்மை என்னவெனில் அயல்நாட்டினர் கண்காணிப்பு தீர்ப்பாயம் இவர் முதலில் தான் இந்தியர்தான் என்று கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர், அதே ஆவணங்களின் ஆதாரத்தில்தான் 1,197 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதே.

 

மே 3ம் தேதி குவஹாட்டி நீதிமன்றம் இவரது தாத்தா 1947-ல் அசாமின் பக்னபோட்டாவில் நிலம் வைத்திருந்ததான ஆவணத்தைக் கண்டது இவர் விடுதலைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

 

மகிழ்ச்சியை விட சோகமே நிலவியது...

 

ரெஹத் அலி விடுதலையடைந்து கோபனிக்குச்சிக்குத் திரும்பும்போது ஊரே அவரை வரவேற்க நின்று கொண்டிருந்தது, ஆனால் அங்கு மகிழ்ச்சியில்லை, துக்கம்தான் நிலவியது.

 

இவரை தடுப்புக் காவல் மையத்துக்கு அழைத்துச் சென்றது முதல் இவரது மனைவி சித்தப்பிரமை பிடித்தவர் போல் ஆகிவிட்டார். இவரை அடையாளமே அவருக்குத் தெரியவில்லை. இந்நிலையில் தொண்டையில் துக்கம் அடைக்க ரெஹத் அலி கூறும்போது, “எங்கள் நிலம், 8 பசுமாடுகள், ஒரு வர்த்தக வாகனம் ஆகியவற்றை அடகுவைத்து ரூ.7 லட்சம் செலவு செய்து என்னை மீட்டதை என் மகன்கள் என்னிடம் கூறவே இல்லை” என்றார் அழுகையின் விளிம்பிலிருந்த ரெஹத் அலி.

 

“நான் வெளியில் வந்து விட்டேன், ஆனால் என்னுடன் சிறையில் இருந்த ஜெஹிருல் இஸ்லாம், நூர் முகமது, சத்யசாது, அப்துல் சமத், ஆகியோர் உட்பட நான் பழகிய பாவப்பட்ட ஜென்மங்கள் என் கனவில் வந்து கொண்டிருக்கின்றனர்.  தங்கள் சாவுக்காக என்னை வேண்டிக்கொள்ளுமாறு மன்றாடுகின்றனர். இவர்கள் 7-8 ஆண்டுகளாக அங்கு இருந்து வருகின்றனர், இவர்கள் ஏழைகள், இவர்களை யார் வெளியே கொண்டு வர முடியும்” என்கிறார் வேதனையுடன்.

 

“நான் விடுவிக்கப்பட்ட அன்று இன்னும் சிறையில் வாடும் 25 பேர்களுக்காக நான் மிகவும் வருந்தினேன். 5 அறைகளில் எப்படி இவ்வளவு பேர் இருக்க முடியும்? ஒவ்வொரு அறையிலும் 70-80 பேர்கள்.. எப்படி இருக்க முடியும்?” என்கிறார் வேதனையுடன்.

 

3 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை இந்தியக் குடிமகன் இருவரிடம் தலா ஒரு லட்சம் பெற்று ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்ததை இவர் அறிந்திருக்கவில்லை.

 

அசாம் அரசு 5 ஆண்டுகள் தடுப்புக் காவல் முகாமில் இருந்தவர்களிடம் ரூ.5 லட்சம் பிணை பெற்று விடுதலை செய்யலாம் என்று கூறியதை உச்ச நீதிமன்றம் 15 நாட்களுக்கு முன்பாக கண்டிப்புடன் ஏற்க மறுத்தது.

 

கிராமமே கவலையிலும் பீதியிலும்...

 

அயல்நாட்டினர் கண்காணிப்பு தீர்ப்பாயம் பர்ஹான் அலி, பதார் அலி, இருவருமே 60வயதைக் கடந்து அதன் பிற்பாதியில் இருப்பவர்கள், இருவரையும் வங்கதேசத்தினர் என்று அறிவித்துள்ளது.  இதில் மாற்றுத்திறனாளியான பர்ஹான் பயத்தில் காணாமல் போய் விட்டார். பதாரை சிறையில் அடைக்க கோர்ட் தடை போட்டுள்ளது.

 

வங்கதேசக்காரர் என்று முத்திரைக் குத்தப்பட்ட பர்ஹானின் 90 வயது தாய் சரியான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்: என்னுடைய 3 மற்ற மகன்கள், நான் ஆகியோர் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இந்தியர் என்று பதிவாகி இருக்கும் போது  என் மூத்த மகன் மட்டும் எப்படி ஐயா வங்கதேசக்காரர் ஆவார்? ” என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.

 

“என்னுடைய அண்ணன் திவான் ஹசன் அலி, உள்ளூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.  இவர் இந்தியர் என்று நிறுவப்பட்ட அதே ஆவணம் என்னை மட்டும் எப்படி பங்களாதேஷி என்று காட்டும்” என்கிறார் பதார் அலி.  மேலும் போலீஸ் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டி என்னை முகாமுக்கு இட்டுச் செல்லலாம் என்கிறார் பயத்துடன்.

 

“இங்கு எப்படி தெரியுமா? அடுத்தது யார்? என்பதுதான் என்கிறார் எகபார் அலி என்பவர், இவரது சகோதரி அனொவர் காதுன் 6 மாதங்களுக்கு முன்பாக அயல்நாட்டைச் சேர்ந்தவர் என்று முத்திரைக் குத்தப்பட்டுள்ளார்.  “எங்கள் ஆவணங்களெல்லாம் ஒரு பொருட்டேயல்ல” என்கிறார் அவர் பீதியுடன்.

 

ஆனால் தண்டனையிலிருந்து மீண்டு வந்த ரஹேத் அலி, தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரம் ஜூலை 31ல் இறுதி செய்யப்படுகிறது. இது ‘பங்களாதேஷி’ என்ற அடையாளம் குத்தப்பட்டவர்களுக்கு ஒரு விடிவாக அமையுமா என்று பார்க்க வேண்டும். என்னுடைய என்.ஆர்.சி. விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே எனக்கு தாமதம் ஆகவில்லை. இந்தியன் பங்களாதேஷியாக்கப்பட்டு மீண்டும் இந்தியனானேன், என்கிறார் ரஹேத் அலி.

 

மூலம்: தி இந்து (ஆங்கிலம்)

தமிழில்: இரா.முத்துக்குமார்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close