[X] Close

மோடிக்கு பொய்த் தகவல்களைத் தருவது யார்?தெரிந்துகொள்ள ஆர்வம்: சிதம்பரம் கிண்டல்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 11:43 am
  • அ+ அ-

பிரதமர் மோடிக்கு பொய்த் தகவல்களை எடுத்துத் தருவது யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

டெல்லியில் புதன் கிழமையன்று ராம்லீலா மைதானில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, முன்னாள் காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியக் கப்பற்படையைச் சேர்ந்த விமானம் தாங்கி ஐ.என்.எஸ். விராட் கப்பலை தன் சொந்த டாக்ஸி போல் பயன்படுத்தி சோனியா காந்தியின் உறவினர் மற்றும் வெளிநாட்டினர்களையெல்லாம் ஏற்றிச் சென்றார் என்று குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மோடியின் குற்றச்சாட்டை அப்போது  ஐ.என்.எஸ். விராட்டின் கமாண்டிங் ஆபீஸராக பணியாற்றியவரும் கப்பற்படை தலைமை அட்மிரலான ஓய்வு பெற்றவருமான எல்.ராமதாஸ் என்பவர் மறுத்தார். அத்துடன் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அந்தக் கப்பலின் கமாண்டிங் ஆபீஸராக இருந்தவரும் ஓய்வுபெற்ற துணை அட்மிரலுமான வினோத் பாரிச்சாவும் மோடியின் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ''நரேந்திர மோடியின் மற்றொரு பொய்யும் புஸ்வாணமாகி விட்டது. கப்பற்படையின் உயர்மட்டத் தலைவர்கள் ராஜீவ் காந்தி ஐஎன்எஸ் விராட்டில் அரசுமுறைப் பயணமாகச் சென்றதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த மாதிரியான பொய்களை எல்லாம் பிரதமருக்கு யார் எடுத்துக் கொடுப்பது என்று தெரிந்துகொள்வதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். ஏன் உண்மையான விவரங்களைச் சரிபார்க்காமல் பிரதமர் பொய்களைத் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எல்லைப் பகுதியில் துல்லியத் தாக்குதல்கள் நடைபெற்றதற்கு அதிகாரபூர்வ ஆவணங்கள் இல்லை என்கிறார் மோடி. எனில், அவருக்குத் தகவல்கள் முறையாகக் கிடைப்பது இல்லை. இதுகுறித்து ராணுவத் தலைவரிடம் ஏன் அவர் பேச மறுக்கிறார்?'' என்று கேள்வி எழுப்பினார் சிதம்பரம்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close