[X] Close

ஐ.என்.எஸ்.விராட்-ஐ ராஜீவ் காந்தி சொந்த டாக்ஸி போல் பயன்படுத்தினார் என்ற மோடியின் குற்றச்சாட்டு உண்மையா? - அப்போதைய கடற்படை அதிகாரிகள் கூறுவது என்ன?


  • kamadenu
  • Posted: 09 May, 2019 19:09 pm
  • அ+ அ-

-பிடிஐ

டெல்லியில் புதன் கிழமையன்று ராம்லீலா மைதானில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, முன்னாள் காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியக் கப்பற்படையைச் சேர்ந்த விமானம் தாங்கி ஐ.என்.எஸ். விராட் கப்பலை தன் சொந்த டாக்ஸி போல் பயன்படுத்தி உறவினர்களையெல்லாம் ஏற்றிச் சென்றார் என்று குற்றச்சாட்டை முன் வைத்தார்.

 

ஆனால் சில முன்னாள் கடற்படை அதிகாரிகள் அரசுமுறைப் பயணத்துக்காகத்தான் ராஜீவ் காந்தி பயன்படுத்தினார் என்று கூறியுள்ளனர்.

 

மோடியின் இந்தக் குற்றச்சாட்டை அப்போது இந்த ஐ.என்.எஸ். விராட்டின் கமாண்டிங் ஆபீசராக பணியாற்றியவர் மற்றும் அப்போதைய கப்பற்படை தலைமை அட்மிரலான ஓய்வுப் பெற்ற எல்.ராமதாஸ் என்பவர் மறுத்துள்ளர்.

 

மேலும் ஓய்வு பெற்ற துணை அட்மிரல் வினோத் பாஸ்ரிச்சாவும் மறுத்துள்ளார், பாஸ்ரிச்சா அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இந்தக் கப்பலின் கமாண்டிங் ஆபீசராக இருந்தவர், மோடி குறிப்பிட்ட அந்த ராஜீவ் காந்தியின் பயணம் 1987ம் ஆண்டு ஆகும். இவர் கூறும்போது அப்போது அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்தே ராஜீவ் காந்தி அதனைப் பயன்படுத்தினார், மேலும் அதில் அயல்நாட்டினரோ, பிற விருந்தாளிகளோ யாரும் இல்லை என்று மறுத்துள்ளார்.

 

“மோடி கூறுவது முற்றிலும் தவறு” என்கிறார் வைஸ் அட்மிரல் பாஸ்ரிச்சா.

 

ஆனால் இன்னொரு முன்னாள் ஒய்வு பெற்ற நேவி கமாண்டர் விகே ஜெட்லி, தன் ட்வீட்டில், “ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஐ.என்.எஸ். விராட்டைப் பயன்படுத்தி பங்கராம் தீவுகளுக்கு விடுமுறையைக் கொண்டாட எடுத்துச் சென்றனர். இந்திய கப்பற்படை ஆதாரங்களைப் பரவலாக சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தினர். நான் அதற்கு நேரடி சாட்சி. நான் அப்போது ஐ.என்.எஸ்.விராட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்” என்று மாற்றுக் கருத்தை வெளியிட்டார்.

 

தெற்கு நேவி கமாண்டர், முன்னாள் தலைமையான ராம்தாஸ், செய்திக் குறிப்பு ஒன்றில், ஐ.என்.எஸ். விராட்டில் எந்த ஒரு அயல்நாட்டினரும் இல்லை, ராஜீவ் காந்தியும் சோனியா காந்தியும் அனைத்து விதிமுறைகளையும் திருப்தி செய்த பிறகே பயன்படுத்தினார்கள் என்கிறார்.

 

“பிரதமர் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி திருவனந்தபுரத்திலிருந்து லட்சத்தீவுகளுக்குச் செல்ல ஐ.என்.எஸ். விராட்டில் சென்றன. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி திருவனந்தபுரத்ஹ்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தலைமை விருந்தாளியாகக் கலந்து கொண்டார்.

 

அவர் லட்சத்தீவுகளுக்கு தீவுகள் வளர்ச்சி ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்ள அரசுமுறைப் பயணமாகவே சென்றார். இந்தக் கூட்டம் லட்சத்தீவுகளிலும் அந்தமானிலும் மாறி மாறி நடக்கும்” என்று கூறியுள்ளார்.

 

அவர் மேலும் கூறும்போது, “கப்பலில் வேறு அயல்நாட்டினர் இல்லை. நான் தான் தலைமைக் கமாண்டர், தெற்கு கடற்படை கமாண்ட், கொச்சினில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், ஐ.என்.எஸ்.விராட்டில் அப்போது உடனிருந்தேன்” என்று கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close