[X] Close

தாய் இறந்த சோகத்தில் மூழ்கியிருந்த ராஜீவுக்கு சீக்கியர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? - பாஜகவுக்கு ஷீலா தீட்சித் கேள்வி


  • kamadenu
  • Posted: 09 May, 2019 17:46 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ராஜீவ் காந்திக்கு என்ன ஆர்வம் இருக்கிறது? என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ராஜீவ் காந்திக்கு தொடர்பிருப்பதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றை பாஜக இன்று காலை வெளியிட்டிருந்தது.

அதில். ''1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், அரசாங்கம் தனது சொந்த மக்களையே கொன்றுள்ளதாக நானாவதி கமிஷன் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களைக் கொல்லுமாறு ராஜீவ் காந்தி அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல்கள் வந்ததாக அக்கமிஷன் தெரிவிக்கிறது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு காங்கிரஸ் மூத்த காங்கிரஸ் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஏஎன்ஐயிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ''ராஜீவ் காந்தி ஏன் அதைச் செய்ய வேண்டும்? அவருடைய தாயார் கொல்லப்பட்ட நிலையில் அவரோ ஆழ்ந்த துயரத்தில் இருந்தார். இந்நிலையில் அவர் எப்படி சீக்கியர்களைக் கொல்லும்படி உத்தரவிட்டிருக்க முடியும்? பாஜக போலவே அவருடைய செயல்பாடும் இருக்கும் என்று நினைத்து விட்டார்களா? பாஜகவின் ட்விட்டர் பதிவு மிகவும் ஏமாற்றமாக உள்ளது'' என்று ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்காவை ஏஎன்ஐ தொடர்புகொண்டபோது அவர், ''1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை அடக்க ராணுவம் அழைக்கப்படவில்லை. மாறாக அவர்களைக் கொல்லுமாறு அன்றைய பிரதமர் அலுவலகத்திலிருந்து நேரடியாக அறிவுறுத்தல்கள் நேரடியாக வந்தன. இதை நானாவதி கமிஷன் முன்பாகவும் மிஸ்ரா கமிஷன் முன்பாகவும் எங்கள் ஆதாரங்களைப் பதிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.

டெல்லியில் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close