[X] Close

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வில் 60% மதிப்பெண் எடுத்த மகனைக் கொண்டாடிய தாய்: சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு


10-60

  • kamadenu
  • Posted: 09 May, 2019 17:07 pm
  • அ+ அ-

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வில் 60% மதிப்பெண்கள் எடுத்த மகனைப் பற்றி அவரது அன்னை ஃபேஸ்புக்கில் பாராட்டிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வந்தனா கடோச் என்ற அந்தப் பெண்மணி பதின்ம வயது பிள்ளைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்த தனது மகன் அதையும் மீறி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 60% மதிப்பெண் எடுத்துள்ளதை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அவரின் ஃபேஸ்புக் பதிவு:

''பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 60% மதிப்பெண் பெற்ற எனது மகனை நினைத்து அதீத பெருமிதம் கொள்கிறேன்.

ஆம், இது ஒன்றும் 90% இல்லைதான். ஆனாலும் என் மகிழ்ச்சியில் சற்றும் குறைவேதும் இல்லை. சில மாதங்களுக்கு முன் என் மகன் கணிதம், அறிவியல், இந்திப் பாடங்களுடன் போராடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நம்பிக்கையை இழந்தார். தேர்வு எழுத வேண்டுமா? என்ற எண்ணம் என் மகனுக்கு வந்தது.

ஆனால், கடைசி ஒன்றரை மாதங்களில் கடின உழைப்பைப் போட்டார். இப்போது 60% மதிப்பெண் பெற்றுள்ளார். அமீர் உனக்கும் உன்னைப் போன்று கஷ்டப்பட்டு தேறிய மாணவர்களுக்கும் வாழ்த்துகள். இது நிச்சயமாக மீன்களை மரத்தில் ஏறச் செய்யும் வேலை போன்றது. இனி உன்னுடைய எதிர்கால படிப்பை நீயே தேர்வு செய். கடலளவு பாடப்பிரிவுகள் உள்ளன.

எனது அன்பு மகனே, உனக்கே உரித்தான நற்பண்பை, ஆர்வத்தை, ஞானத்தை உயிர்ப்புடன் வைத்திரு. அப்புறம் உன் நகைச்சுவை உணர்வையும்தான்''.

இவ்வாறு வந்தனா பதிவிட்டிருந்தார்.

குவிந்த லைக்குகள்:

24 மணி நேரத்தில் அந்தப் பதிவு அதிக லைக்குகள் பெற்றது. இப்போது இந்தச் செய்தியைப் பதிவு செய்யும் வேளையில் 724 பின்னூட்டங்கள் அந்தப் பதிவில் உள்ளன. 2600-க்கும் மேற்பட்டோர் வந்தனாவின் பதிவைப் பகிர்ந்துள்ளனர்.

மதிப்பெண் மட்டுமே பிள்ளைகளின் அறிவைத் தீர்மானிக்கும் என்று பெற்றோர் பெரும்பாலானோர் 1 மதிப்பெண் 2 மதிப்பெண்கள் குறைந்ததற்கு எல்லாம் வசைபாடிக் கொண்டிருக்கும் இந்தத் தேர்வு காலத்தில் வந்தனாவின் பதிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close