[X] Close

மகாராஷ்டிராவில் மனித உரிமை ஆர்வலரைத் தாக்கிய பசு பாதுகாவலர்கள்: பேஸ்புக் பதிவினால் கைகலப்பு


  • kamadenu
  • Posted: 08 May, 2019 17:13 pm
  • அ+ அ-

-பிடிஐ

மகாராஷ்டிராவில் ஒரு சிறிய பிரச்சினையில் மனித உரிமை ஆர்வலர் மீது பசுப் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

புனே மாவட்டத்தின் சென்டெவாடி நகரின் சாஸ்வத் பகுதியில் நேற்று காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்த விவரம்:

சம்பவத்தின்போது சஸ்வாடு பகுதிக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனித உரிமை ஆர்வலர் மிலிந்த் எக்போட் என்பவர் வந்திருந்தார். அவர் ஏற்கனெவே கோரேகான் பீமா வன்முறை வழக்கில் ஒரு குற்றச்சாட்டப்பட்டவர்.

பசு பாதுகாவலரான பண்டிட் மோதக் என்பவர் 40 லிருந்து 50 வரையுள்ள மக்களுடன் வந்து இவரைத் தாக்கியதாக புகார் அளித்துள்ளார். பண்டிட் மோதக் அவர் அதே பகுதியில் பசுக்களை பராமரிக்கும் 'கோசாலா' நடத்திவருபவர்.

எக்போட் தனது பேஸ்புக் பக்கத்தில் கோசாலை குறித்து மோதக் பண்டிட்டின் செயல்பாடுகள் சந்தேகத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாக எழுதி பதிவேற்றியிருந்தார். இதனால் செண்டேவாடி பகுதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தவரை மோதக் தனது ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு அவரை சந்தித்து அவரின் பேஸ்புக் பதிவு குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

இதனால் கோவில் வளாகத்தில் வைத்து அவர்களுக்குள் விவாதம் உருவானது. இதனைத் தொடர்ந்து ஏக்போத் மற்றும் மோதக் ஆகிய இருவருக்குமான ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கோவில் வளாகத்திற்குள்ளேயே கலவரம் வெடிக்க அங்கே ஏற்கெனவே இருந்த காவலர்களில் சிலர் அதில் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பின்னர் இரவில் சாஸ்வத் காவல்நிலையத்திற்கு வந்துசேர்ந்த ஏக்போத் மோதக் பண்டிட் உள்ளிட்ட 40 லிருந்து 50 பேர் மீது புகார் அளித்தார்.

ஏக்போத்தின் புகாரின் அடிப்படையில், மோதக் உள்ளிட்டோர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கை காவல்நிலையம் பதிவுசெய்துகொண்டது. எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

ஏக்போத்தும் மோதக்கும் ஆரம்ப காலகட்டங்களில் ஒன்றாக இணைந்து செயல்பட்டவர்கள் என்றும் பிறகு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வெவ்வேறு பாதைகளை அவர்கள் தேர்ந்தெடுத்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். இதில் ஏக்போத் என்பவர் கோரேகான் பீமா வன்முறை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளவர்.

 

 

 

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close