[X] Close

இந்தியாவின் வலிமையை எதிர்க்கட்சிகள் அங்கீகரிக்கவில்லை: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 06 May, 2019 07:59 am
  • அ+ அ-

இந்தியாவின் வலிமையை எதிர்க் கட்சிகள் அங்கீகரிக்க மறுக்கின்றன என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் பதோஹி, மத்திய பிரதேசத்தின் சாகரில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:மன்னராட்சி, இடதுசாரி ஆட்சி, பண பலம்-ஆள் பலம் ஆட்சி, வளர்ச்சி ஆட்சி என 4 விதமாக அரசுகள் உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வளர்ச்சி ஆட்சியை நடத்தி வருகிறது. 130 கோடி மக்களின் நலனுக்காக அயராது உழைத்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தங்கள் குடும்பத்தின் நலனில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். மக்கள் நலனில் அவர்களுக்கு துளியும் அக்கறை கிடையாது. பாகிஸ்தானில் துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணைவெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நமது நாடு பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. சர்வதேச அளவில் நாட்டின் வலிமை அதிகரித்து வருகிறது. ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் அங்கீகரிக்க மறுக்கின்றன. பல்வேறு முஸ்லிம் நாடுகளில் முத்தலாக் விவாகரத்து நடைமுறை தடை செய்யப்பட்டுள்ளது

. நமது முஸ்லிம் சகோதரிகளுக்கும் இந்த உரிமை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். குஜராத் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்துள்ளது. என் மீது எந்த ஊழல் கறையும் கிடையாது. ஊழலின் மறுபெயராக காங்கிரஸ் விளங்குகிறது. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல் என்ற நிலை இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல், இடைத்தரகர்களுக்கு இடமில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close