[X] Close

ஆயுதங்களைக் கைவிட்டு பொது அரசியலுக்குத் திரும்பிய ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள்


  • kamadenu
  • Posted: 05 May, 2019 15:23 pm
  • அ+ அ-

-பிடிஐ

ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் ஆயுதங்களைக் கைவிட்டு பொது அரசியலுக்குத் திரும்பியுள்ளதாக காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனத்தை தற்கொலைப்படைத் தாக்குதல் மூலம் தகர்த்து துணை ராணுவப்படையைச் சேர்ந்த 40 பேர் உயிரிழப்புக்குக் காரணமான இயக்கம்தான் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம்.

இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்திய விமானப் படை பாகிஸ்தானின் பாசறைகளுக்கே சென்று பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்க முகாம்களைத் தகர்த்தது. போலீஸாரின் முயற்சியால் சில புதிய மாற்றங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புல்வாமாவைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதி ஒருவர் ஆயுதங்களைக் கைவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீநகர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:

''புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி. அவர் போலீஸாரின் முயற்சியால் ஆயுதங்களைக் கைவிட்டு பொது அரசியலுக்குத் திரும்பியுள்ளார். தன்னுடைய பெயரை அவர் வெளிப்படுத்த விரும்பவில்லை. அதே நேரம் அவரது அடையாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

இன்னும் ஒரு புல்வாமா இளைஞரும் ஆயுதங்களைக் கைவிட்டுள்ளார். இவரும் ஜெய்ஷ் முகம்மது இயக்கத்தின் முக்கியத் தீவிரவாதியாவார். இவரது குடும்பத்தினர் மற்றும் போலீஸாரின் முயற்சியால் இவரும் பொது அரசியலுக்குத் திரும்பியுள்ளார்''.

இவ்வாறு ஸ்ரீநகர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சில மோதல் சம்பவங்களின்போதுகூட தீவிரவாதிகள் சரணடைவதற்கான வாய்ப்புகளை போலீஸார் அறிவித்ததிலிருந்து 2017-ல் இருந்து காஷ்மீரில் டஜன் கணக்கான தீவிரவாதிகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டுள்ளனர். இதில் தீவிரவாதிகளின் குடும்பத்தினரே வன்முறைப் பாதைக்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகு அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு தங்கள் குடும்பத்தினருடன் இணைந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close