[X] Close

‘மெகா கூட்டணி’ ஆட்சிக்கு வந்தால்.. நாட்டில் ‘மெகா ஊழல்’ அதிகரிக்கும்: பிரதமர் மோடி சரமாரி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 05 May, 2019 06:53 am
  • அ+ அ-

‘‘மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் மெகா ஊழல்தான் அதிகரிக்கும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் நகரில் பாஜக சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடைந்துவிட்டது. அதை அந்தக் கட்சி விரைவில் பார்க்க போகிறது. காங்கிரஸ் கட்சி வாக்கு அரசியலில் ஈடுபடுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது தற்பெருமையாலேயே வீழ்ச்சி அடைய போகிறார்.

உ.பி.யில் எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ள ‘மெகா கூட்டணி’யால் ‘மெகா ஊழல்’தான் அதிகரிக்கும். ரே பரேலியில் சமாஜ்வாதி கட்சிக் கூட்டம் நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலும் பங்கேற்றார். அப்போது மிக பழமையான காங்கிரஸ் கட்சியை, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி விஷயத்தில் சமாஜ்வாதி கட்சி மிதவாத போக்கைக் கடைபிடிக்கிறது. ஆனால், சமாஜ்வாதியின் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி காங்கிரஸை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மெகா கூட்டணியில் உள்ள 2 கட்சிகளுமே முரண்பட்டு செயல்படுகின்றன.

மிகவும் நேர்மையானவர் என்று கூறப்பட்ட முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி, ‘ஊழலில் நம்பர் ஒன்’ என்று மாறினார். கடந்த காலங்களில் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் கட்சி திடீரென விலக்கிக் கொண்டதை நினைத்துப் பார்க்கிறேன். அதனால் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போனது. எனவே, பாஜக.வினால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அப்போது கூடியிருந்த தொண்டர்கள், ‘மீண்டும் மோடி ஆட்சி’ என்று உற்சாகத்தில் கோஷமிட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close