[X] Close

'இனவாத தாக்குதல்களில் இருந்து ஜனநாயகத்தை மீட்போம்'-ஆம் ஆத்மி கட்சிக்காகப் பிரச்சாரம் செய்யும் பிரகாஷ் ராஜ் பேச்சு


  • kamadenu
  • Posted: 04 May, 2019 18:08 pm
  • அ+ அ-

 

 

பெங்களூரு மத்தியத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டவரும் நடிகருமான பிரகாஷ் ராஜ், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்காகப் பிரச்சாரம் செய்கிறார்.

 

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராயுடன் இணைந்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரகாஷ் ராஜ். அப்போது பேசிய அவர், ''நானும் ஆம் ஆத்மியில் (சாமான்ய மனிதர்) ஒருவன் தான்.

 

மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது இந்தத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போராடும் கட்சிக்காவும், அதன் வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளேன்.

 

சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிடுகிறது.

 

இதுதான் நமக்கு வேண்டும். வேறு வேறு சிந்தனைகளோடு இருக்கும் வெவ்வேறு மனிதர்கள் நாட்டை நேசிப்பதில் ஒற்றுமையாக இருக்கிறோம். அத்தகையோர் ஒன்றுசேர்ந்து ஜனநாயகத்தை உருவாக்கவேண்டும். இப்போது இருக்கும் வகுப்புவாதத் தாக்குதல்கள், வெறுப்பரசியல் ஆகியவற்றால் ஆபத்தில் இருக்கும் குடியரசை மீட்டெடுக்க வேண்டும்'' என்றார் பிரகாஷ் ராஜ்.

 

டெல்லி வடகிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் திலிப் பாண்டேவுக்காக சனிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்கிறார் பிரகாஷ் ராஜ். அதேபோல புது டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close