[X] Close

ஃபானி புயலில் சிக்கிய மக்களுக்கு பாதுகாப்பு: பாலிவுட் நட்சத்திரங்கள் பிரார்த்தனை


  • kamadenu
  • Posted: 03 May, 2019 18:05 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

ஃபானி புயலில் இருந்து மக்கள் காக்கப்படவேண்டும் என பிரார்த்திப்பதாக அபிஷேக் பச்சன், தமன்னா, ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று ஆழ்ந்த, தீவிர காற்றழுத்த தாழ் மண்டலமாக மாறி ஃபானி புயலாக மாறியது.

அதிதீவிர புயலாக மாறிய ஃபானி புயல் இன்று காலை 200 கி.மீ.வேகத்தில் ஒடிசா மாநிலம் கோபால்பூர், சந்தாபாலி பகுதியில் கரையைக் கடந்தது. தொடர்ந்து அந்த புயல் மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கிழக்கு மிட்னாபூர் உள்ளிட்ட இடங்களில் புயலின் தாக்கத்தால் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புயலின் சேதங்களிலிருந்து மக்களைக்காக்க பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் பிரார்த்தனை ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில:

தமன்னா: ஒடிசா, ஆந்திரா பிரதேஷ் மற்றும் மேற்கு வங்க மக்களுடன் சேர்ந்து அவர்களுக்காக நானும் பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கவேண்டும்.

ரித்தேஷ் தேஷ்முக்: ஃபானி புயல் தாக்குதல் நடந்த பகுதிகளில் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதுடன் எமர்ஜென்ஸி எண்களையும் வைத்திருக்க வேண்டும்.

அபிஷேக் பச்சன்: ஃபானி புயல் செல்லும் பாதைகளில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

சித்தார்த் மல்ஹோத்ரா: ஒவ்வொருவரும் உறுதியுடனும் பாதுகாப்பாகவும் இருங்கள்.

பூமி பெட்நேகர்: ஒடிசா மக்களுக்காக பிரார்த்திக்கிறேன்.

பிரித்தம்: ஃபானி புயல் தாக்குதலுக்கு ஆளான ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close