அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 24 மணி நேரத்தில் 52 பேர் பலி!


கடந்த 24 மணி நேரத்தில் அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாமில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஏற்கெனவே மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று பெய்த கனமழை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளப் பாதிப்பால் அசாம் மாநிலத்தின் 35 மாவட்டங்களில் 30 கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 24 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழை, வெள்ளம் காரணமாக அசாமில் கடந்த ஒரு மாதமாக நிலைமை மோசமாக உள்ளது, இதனால் உயிர் இழப்புகள் மட்டுமின்றி பயிர்ச்சேதம், கால்நடை உயிரிழப்பு என விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து வீடற்ற நிலையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு காரணமாக 52 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.