[X] Close

ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 15:41 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க, தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

இந்த மனுவை டெல்லியைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல், சந்தர் பிரகாஷ் தியாகி ஆகியோர் தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பருன் குமார் சின்ஹா ஆஜராகினார். அவர் தாக்கல் செய்த மனுவில், " காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமையை தாமாக முன்வந்து பெற்றுள்ளார். இதை 2005 மற்றும் 2006-ம் ஆண்டு இங்கிலாந்தின் பேக்காப்ஸ் நிறுவனத்தில் ஆண்டு ரிட்டன் தாக்கல் செய்தபோது இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் உண்மையான நிலை என்ன என்று விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால், மத்திய அரசின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமையே தாமாக முன்வந்து பெற்றுள்ளார் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஆதலால், இங்கிலாந்து நாட்டிடம் தாமாக முன்வந்து குடியுரிமை பெற்ற ராகுல் காந்தி, ஒரேசமயத்தில்  இந்திய குடியுரிமையையும் வைத்திருக்க முடியுமா என்பதை மத்திய அரசு முடிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும், இங்கிலாந்து குடியுரிமையை தாமாக முன்வந்து பெற்ற ராகுல் காந்தி அமேதி, வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்க முடியுமா, அவரை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க முடியுமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் " எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close