[X] Close

ராகுல் காந்தியின் குடியுரிமையை சந்தேகிப்பவர்கள் தேச விரோதிகள்: குஷ்பு காட்டம்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 11:00 am
  • அ+ அ-

ராகுல் காந்தியின் குடியுரிமையை சந்தேகிப்பவர்கள் தான் உண்மையான தேச விரோதிகள் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு காட்டமாக பதிவிட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், "ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இங்கிலாந்தைச் சேர்ந்த பேக்காப்ஸ் என்ற நிறுவனம் ஒன்றில் ராகுல் காந்தி 2003-ம் ஆண்டில் இருந்து நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும், செயலாளராவும் இருந்து வருகறார்.  கடந்த 2005, அக்டோபர் 10 மற்றும் 2006, அக்டோபர் 31-ம் தேதி ஆண்டு ரிட்டன் தாக்கல் செய்தபோது, தன்னுடைய பிறந்தநாள் 1970, ஜூன் 19 " என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சகம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி, 14 நாட்களில் உண்மையான நிலை என்ன என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியினர் இதனை கடுமையாக சாடி வருகிறார்கள். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்  குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், “ராகுல் காந்தியின் குடியுரிமையை சந்தேகிப்பவர்கள் தான் உண்மையான தேச விரோதிகள்.

தனது பாட்டி படுகொலை செய்யப்பட்டதை, தனது தந்தை தேசத்துக்காக உடல் சிதறி இறந்ததைப் பார்த்தவர். இவற்றையெல்லாம் பார்த்த பின்னரும் தேசத்துக்காக சேவை செய்யும் அவர்தான் தூய்மையான இந்திய ரத்தம் கொண்டவர். அவரது தேசப்பற்றை எப்படி இவர்கள் சந்தேகிக்கப்படுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close